நெடுஞ்சாலையில் வேகத்தடை

நெடுஞ்சாலையில் வேகத்தடை

Update: 2021-11-23 12:00 GMT
வெள்ளகோவில், 
வெள்ளகோவில் வழியாக திருச்சிகோவை நெடுஞ்சாலை செல்கிறது.  வெள்ளகோவில் நகர்ப்பகுதியில் சாலை விரிவாக்க பணி முடிந்து சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளகோவில் நகர்ப்பகுதியில் அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை போக்குவரத்து அதிகம் உள்ள சாலை ஆகும்.எனவே  நகர் பகுதியில் விபத்துகளை தவிர்க்க நகரின் இருபுற எல்லைகளில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்