உலக மீன்வள தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் நடந்த சுவரொட்டி வரையும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் நடந்த சுவரொட்டி வரையும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது

Update: 2021-11-23 11:32 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர் சங்கம் மூலம் “உலக மீன்வள தினம்” கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கல்லூரி மாணவ - மாணவிகளுக்கான “சுவரொட்டி வரையும் போட்டி” நடத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுஜாத்குமார் தலைமை தாங்கினார். மாணவி அப்ரின் பானு வரவேற்று பேசினார். மாணவி யுபோ உலக மீன்வள தினம் குறித்து பேசினார். மாணவிகள் சகாய ரூப்னா, ராஜேசுவரி ஆகியோர் கவிதை வாசித்தனர். மாணவர் மன்ற துணைத்தலைவர் சா.ஆதித்தன் உலக மீன்வள தினத்தை கொண்டாடுவதின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் திரளான பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர் மன்ற செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்