சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-22 21:16 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பில்லங்குளம் பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் பில்லங்குளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புலியங்குறிச்சி சாலையில் பில்லங்குளம் கிராமத்தை சேர்ந்த முருகேசன்(வயது 48) சாராயம் விற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகேசனை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக 40 பாக்கெட்டில் வைத்திருந்த 8 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்