பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடையநல்லூர்:
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தி.மு.க. அரசை கண்டித்து கடையநல்லூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே பா.ஜனதா மாவட்ட இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞர் அணி மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவி மகாலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் மருதுபாண்டி, துணை தலைவர் சங்கர், முப்புடாதி, செயலாளர் ரஞ்சித், பொருளாளர் சிவா மணிகண்டன், நகர தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ராமராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.