பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு பா.ஜனதா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட இளைஞர் அணி தலைவர் கணபதி, மகளிர் அணி தலைவி செல்வக்கனி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தச்சநல்லூர் மண்டல தலைவர் முருகப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மகாராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசின் வாட் வரியை குறைக்க வலியுறுத்தியும், வாட் வரியை குறைக்க மறுக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர் கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.