ஆம்பூர் அருகே பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்

வெள்ளநீரை வெளியேற்றக்கோரி ஆம்பூர் அருகே துத்திப்பட்டில் பொதுமக்கள் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-22 18:53 GMT
ஆம்பூர்

வெள்ளநீரை வெளியேற்றக்கோரி ஆம்பூர் அருகே துத்திப்பட்டில் பொதுமக்கள் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.

பாலாற்றில் வெள்ளம்

ஆம்பூர் பகுதியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்தநிலையில் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். 

உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடபெற்றது. ஆனாலும் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் வடியாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேரம் இன்த போராட்டம் நடந்தது. இந்தநிலையில் நேற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தை

தகவலறிந்து வந்த உமராபாத் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கால்வாய்கள் தூர்வாருதல் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை அதிகாரிகள் விரைவுபடுத்தியதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்