பஸ் படிகட்டில் தொங்கிய படி பயணம் செய்யும் மாணவர்கள்
பஸ் படிகட்டில் தொங்கிய படி பயணம் செய்யும் மாணவர்கள்
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி பகுதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளன. அதில் நாட்டறம்பள்ளி, பச்சூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
வழக்கும்போல் நேற்று மாலை பள்ளிகள் முடிந்ததும் வீட்டுக்கு திரும்பி செல்ல நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்துக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்த மாணவ-மாணவிகள் திருப்பத்தூர், பச்சூர் நோக்கி செல்லும் ஒரு தனியார் பஸ்சில் ஏறினர்.
அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் படிகட்டில் தொங்கிய படி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர். எனவே பள்ளிகள் விடும் மாலை வேளையில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.