மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி;
சோளிங்கர்
சோளிங்கரை அடுத்த கட்டாரிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 27). இவர் மோட்டார் சைக்கிளில் அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி அவரை லாரி இழுத்துச் சென்றுள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டு அதன்பேரில் டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
லாரியில் சிக்கிய நீலகண்டன் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செனறு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடிவருகின்றனா்.