தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-11-22 18:21 GMT
வேலூர்

வேலூர் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சார்பாக நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இளைஞரணி மாநில துணை தலைவர் குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் தசரதன், மகளிர் அணி மாவட்ட தலைவி கிருஷ்ணகுமாரி, மாவட்ட துணை தலைவர் ஜெகன், ஒ.பி.சி.அணி மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.கே. மோகன், பொது செயலாளர் பாபு மற்றும் பலர் கலந்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்