பாலாற்று வெள்ளத்தில் கவிழ்ந்த பொக்லைன் எந்திரம்
பாலாற்று வெள்ளத்தில் கவிழ்ந்த பொக்லைன் எந்திரம்
ஆம்பூர்
தொடர் மழைகாரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நரியம்பட்டு அருகே உள்ள மலட்டாறு தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று பாலாற்று வெள்ளத்தில் தென்னை மரங்கள் அடித்து வரப்பட்டது. இந்த தென்னை மரங்களை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த பொக்லைன் எந்திரம் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சுதாகர் உயிர்தப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.