பெண் உள்பட 2 பேர் பலி

மோட்டார்சைக்கிள் மோதி பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2021-11-22 18:15 GMT
காளையார்கோவில், 
காளையார்கோவில் அருகே நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த கொத்தனார்கள் கமலக் கண்ணன் (வயது37),  சுப்ரதீபம் (30). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கட்டிட வேலையை முடித்துவிட்டு நாட்டரசன் கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர். கொல்லங்குடி அருகே சென்ற போது சாலையோரத்தில் நடந்து சென்ற கொல்லங்குடியை சேர்ந்த மாதவன் என்பவரது மனைவி சரஸ்வதி (45) மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் சரஸ்வதி மற்றும் சுப்ரதீபம் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கமலக்கண்ணன் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.. இது குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்