2-வது திருமணம் செய்தவர் கைது
2-வது திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கடியா பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 31). இவர் சினிமா சூட்டிங்கிற்கு துணை நடிகர், நடிகைகளை ஏற்பாடு செய்யும் ஏஜெண்ட் ஆவார். இவர் 2019-ல் குன்றக்குடியை சேர்ந்த பாண்டிச்செல்வி (29) என்பவரை வீட்டிற்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்தநிலையில் பாண்டிச்செல்வியின் 10 பவுன்தங்க நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றி வந்துள்ளார். அதனை பாண்டிச்செல்வி கேட்டபோது அவரை ஆபாசமாக பேசி அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இந்தநிலையில் பாலகிருஷ்ணன் லட்சுமி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பாண்டிச்செல்வி காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பாலகிருஷ்ணன், லட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.