மகள் கண்முன் தந்தை பலி

மோட்டார் சைக்கிள்கள், கார் அடுத்தடுத்து மோதி மகள் கண்முன் தந்தை பலியானார்.

Update: 2021-11-22 17:18 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தை அடுத்துள்ள காரிக்கூட்டம் அருகே உள்ள வாணியங்குளத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது51). வெளிநாட்டில் இருந்து வந்த இவர், பெயின்டிங் வேலை செய்து வந்தார். 
இவர் தன்னுடைய மகள் வினோதாவுடன் (18) மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் வந்தார். நேற்று பிற்பகலில் 2 பேரும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். ராமநாதபுரம் அருகே குயவன்குடி பகுதியில் சென்றபோது பின்னால் தெற்கூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன்கள் பிரபாகரன் (28), பாபு (25) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. 
இதனால் நிலைதடுமாறிய முருகேசனின் மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகேசன், மகள் கண்முன் பரிதாபமாக பலியானார். 
வினோதா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சகோதரர்கள் இருவரும் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காரை ஓட்டிவந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையத்தை சேர்ந்த பிரபாகரனிடம் (33)  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்