விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
விருத்தாசலம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மணியரசன் தலைமை தாங்கினார். சேத்தியாத்தோப்பில் இருந்து அகரஆலம்பாடி வழியாக விருத்தாசலம் செல்லும் நெடுஞ்சாலையில் பெரியகுப்பம் பஸ் நிறுத்தம் உள்ளது.
இங்கு பஸ் ஏறுவதற்காக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நெடுஞ்சாலையில் வேகத்தடை இல்லாததால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க அங்கு வேகத்தடை அமைக்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.