விவசாயி வீட்டில் நகை திருட்டு
கம்பத்தில் விவசாயி வீட்டில் பூட்ைட உடைத்து பீரோவில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கம்பம்:
கம்பம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்தவர் திருக்குமார் (வயது 43). விவசாயி. இவர் கடந்த 20-ந்தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அணைக்கரைப்பட்டியில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை உறவினர்கள் பார்த்தனர்.
இதுகுறித்து திருக்குமாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் வீட்டுக்கு வந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் திருக்குமார் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.