பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தேனியில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
தேனி:
தேனி பழைய பஸ் நிலையம் முன்பு பா.ஜ.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் சங்கரபாண்டி, பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் மாரிச்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், நகர தலைவர் விஜயகுமார், நகர துணைத்தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசு ‘வாட்’ வரியை குறைக்க வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒரு சரக்கு வேனில் 2 கழுதைகளை பா.ஜ.க.வினர் கொண்டு வந்தனர். ஆனால், கழுதைகளை வேனில் இருந்து இறக்க போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கழுதைகள் இருந்த வேன் அங்கிருந்து அனுப்பப்பட்டது.