திருக்கோவிலூர் உலகலந்த பெருமால் கோவிலில் 26-ம் பட்ட ஜீயருக்கு பட்டாபிஷேக விழா
திருக்கோவிலூர் உலகலந்த பெருமாள் கோவிலில் 26-ம் பட்ட ஜீயருக்கு பட்டாபிஷேக விழா நடந்தது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடத்தை சேர்ந்த ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில் ஜீயர் பட்டாபிஷேக விழா ஜீயர் மடத்தில் நடைபெற்றது. விழாவில் திருச்சித்ரகூடம் ஶ்ரீ உ.வே. டாக்டர் ஏ.வி.ரங்காச்சார்யர் சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 26-ம் பட்டம் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீ உ.வே. தேகளிசராமானுஜாசார்ய சாமிகளுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்து, செங்கோல் வழங்கினார். இதனை தொடர்ந்து ஜீயர் சாமிகள், கோவில் மற்றும் மடம் எதிரே அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடையில் அமர வைக்கப்பட்டார். அப்போது 108 திவ்ய தேச கோவில் மடாதிபதிகள் அனுப்பி வைத்திருந்த முதல் மரியாதையை அந்தந்த கோவில் சார்பாக வந்திருந்தவர்கள் ஜீயர் சாமிகளுக்கு வழங்கினார்கள். தொடர்ந்து ஜீயர் சாமிகள் மேளதாளம் முழங்க கோவிலுக்கு உள்ளே அழைத்து செல்லப்பட்டார். பின்னர் ஜீயர் மடத்திற்கு வருகை தந்த ஜீயர் சாமிகளுக்கு முக்கிய பிரமுகர்கள் மரியாதை செய்தனர். பின்னர் ஜீயர் சாமிகள் அனைவருக்கும் ஆசி வழங்கினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரின் மனைவி விசாலாட்சி பொன்முடி, முன்னாள் எம்.பி. ஆதிசங்கர், புதுவை மாநில முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர், தொழிலதிபர் ஜெ.முருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் எஸ்.கார்த்திகேயன், ஸ்ரீ சாரதா வித்யாஷ்ரம் பள்ளி நிர்வாகி பிரபு சிவராஜ், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் டி.என்.முருகன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வக்கீல் எம்.தங்கம், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.விநாயகமூர்த்தி, திருக்கோவிலூர் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் டி.குணா என்கிற குணசேகரன், நகர தி.மு.க. செயலாளர் ஆர்.கோபி என்கிற கோபி கிருஷ்ணன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் எஸ்.இளவரசன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சி.ஆர்.சம்பத் மற்றும் முக்கிய பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பவர் ஏஜன்ட் கோலாகலன் என்கிற கிருஷ்ணன் தலைமையில் கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், உபயதாரர்கள் செய்திருந்தனர்.