வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நேற்று வந்த மத்திய குழுவினரை விமான நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் சந்தித்து பேசினார்
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நேற்று வந்த மத்திய குழுவினரை விமான நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் சந்தித்து பேசினார்
தூத்துக்குடி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய அரசு அமைத்து உள்ள குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்துக்கு வந்தனர். குழுவை சேர்ந்த மத்திய நிதித்துறை ஆலோசகா் ஆா்.பி.கவுல், நீா்வள ஆணையத்தின் இயக்குனர் ஆா்.தங்கமணி, எரிசக்தி துறை உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே ஆகியோா் வந்தனர். குழுவினருடன் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் வந்தார்.
அவர்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தகவல்களை தெரிவித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அந்த குழுவினர் கார் மூலம் குமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக புறப்பட்டு சென்றனர்.