திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள இரண்டெல்லபாறை நடுத்தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). விவசாயி. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. பின்னர் அவரது மனைவி கர்ப்பிணியானார். இந்த நிலையில் அவருக்கு கர்ப்பம் கலைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது விக்னேசுக்கு மனவேதனையை ஏற்படுத்தியது. இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.