கோதவாடி குளத்துக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு

கோதவாடி குளத்துக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு

Update: 2021-11-22 15:14 GMT
கிணத்துக்கடவு

மெட்டுவாவி கிளை வாய்க்கால் மூலம் கோதவாடி குளத்துக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. 

கோதவாடி குளம் 

கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளம் உள்ளது. கோதவாடி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்தபோதும் 153 ஏக்கர் கொண்ட இந்த குளத்துக்கு தண்ணீர் வரவில்லை. எனவே மழைக் காலத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் வீணாக செல்லும் உபரிநீரை இந்த குளத்துக்கு திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டது. 

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்டுவாவி மற்றும் செட்டியக்காபாளையம் கிளைவாய்க்கால் மூலம் இந்த குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் மெட்டுவாவி வாய்க்காலில் இருந்து திறப்பது நிறுத்தப்பட்டது. 

மீண்டும் தண்ணீர் திறப்பு 

இதற்கிடையே விவசாயிகள் கோரிக்கையின்பேரில் மெட்டுவாவி வாய்க்கால் மூலம் நேற்று மீண்டும் கோதவாடி குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து கோதவாடி குளத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

 கோதவாடி குளம் 11 மில்லியன் கனஅடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது ஆகும். தற்போது செட்டியக்கா பாளை யம் வாய்க்கால் மூலம் திறக்கப்பட்ட தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் 2 மில்லியன் கனஅடி தண்ணீர் குளத்தில் இருக்கிறது. 

இந்த நிலையில் மெட்டுவாவி வாய்க்கால் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டதால் அந்த தண்ணீர் விரைவில் வந்து சேரும் என்பதால் குளம் வேகமாக நிரம்பும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.  

பொதுமக்கள் மகிழ்ச்சி 

இந்த குளத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் இருப்பதால் கோதவாடி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் மகிழ்ச்சியுடன் அங்கு குவிந்து வருவதுடன், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து செல்கிறார்கள்.

மேலும் செய்திகள்