இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

Update: 2021-11-22 14:58 GMT
பேரூர்

கோவையை அடுத்த பேரூர் பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐ.டி., நிறுவ னத்தில் வேலை பார்த்து வருகிறார். 

அவர், தற்போது கொரோனா கார ணமாக வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்தார்.

 அதை அதே பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் ரூபன் ‌‌ (வயது 39) என்பவர் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். உடனே பாக்கியநாதன் ரூபன் தப்பி ஓடி விட்டார். 

இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் பெற்றோரிடம் கூறினார். அவர் கள், பாக்கியநாதன் ரூபன் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி உள்ளார். 

இது குறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாக்கியநாதன் ரூபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்