மார்ச் - 2014 முதல் செப்டம்பர்-2018 வரையிலான மேல்நிலை தேர்வு அசல் மதிப்பெண்களை பெற்று கொள்ளலாம்; கலெக்டர் ராகுல்நாத்

மார்ச் - 2014 முதல் செப்டம்பர்-2018 வரையிலான மேல்நிலை தேர்வு அசல் மதிப்பெண்களை பெற்று கொள்ளலாம் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.

Update: 2021-11-22 14:13 GMT
மார்ச்-2014 முதல் செப்டம்பர்-2018 மேல்நிலை தேர்வுகளின் அனைத்து பருவங்களுக்குரிய உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களது மதிப்பெண் சான்றிதழ்களை கழிவுத்தாட்களாக மாற்றிடும் பொருட்டு, நாளிதழில் வெளியிட்டு, இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாதவர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் சம்பந்தப்பட்ட தனித்தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் காஞ்சீபுரம் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.12.2021-க்குள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தேதிக்கு பின்னர் சான்றிதழ்கள் அழிக்கப்படும் எனவும், அதன் பின்னர் சான்றிதழ்களை பெற விரும்புவோர் 2-ம் படி சான்றிதழுக்கு உரிய கட்டணம் செலுத்தி பெற்று கொள்ள வேண்டும்.

மேலும் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம், (அரசு உ யர்நிலைப்பள்ளி வளாகம்) நசரத்பேட்டை, செங்கல்பட்டு-காஞ்சீபுரம் பிரதான சாலை, காஞ்சீபுரம்- 631501 என்ற முகவரி அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்