தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, மாதாநகர் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தூத்துக்குடியை சேர்ந்த மணிராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று ராஜபாளையம் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்ற சந்தனகுமார் என்பவரை தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரிய இருதயம் கைது செய்தார். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.