சண்டை சேவல்களை வாங்கி செல்லும் வியாபாரிகள்

சண்டை சேவல்களை வாங்கி செல்லும் வியாபாரிகள்

Update: 2021-11-22 11:50 GMT
குன்னத்தூர்
குன்னத்தூர் சந்தை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரிய சந்தையாகும். குன்னத்தூர் பகுதியில் வளர்க்கப்படும் கட்டு சேவல்களுக்கு ஆரம்பம் முதலே சண்டைக்கு பயிற்சி கொடுத்து வளர்த்து வருகிறார்கள். ஆதலால் தமிழ்நாடு மட்டுமன்றி வெளிமாநில வியாபாரிகள் குன்னத்தூர் பகுதியில் உள்ள கட்டு சேவல்களை அதிகம் விரும்பி வாங்கி செல்கிறார்கள். மேலும் குன்னத்தூர் பகுதியில் உள்ள கட்டு சேவல்களுக்கு வெளிமாநிலங்களில் அதிக கிராக்கி உண்டு. ‌ வெளி மாநிலத்தில் உள்ளவர்கள் குன்னத்தூர் பகுதியில் உள்ள கட்டு சேவல்களை அதிகம் விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.
ஒரு  கட்டுசேவல் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி செல்கிறார்கள். 

மேலும் செய்திகள்