பஞ்சப்பள்ளி அருகே மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு
பஞ்சப்பள்ளி அருகே மூதாட்டியை தாக்கி மர்ம நபர் நகை பறித்து சென்றார்.
பாலக்கோடு:
பஞ்சப்பள்ளி அருகே பெரிய தப்பை பகுதியை சேர்ந்தவர் சின்னபையன். மனைவி சின்னத்தாய் (வயது70). இவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டு முன்பு தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் முகத்தை தலையணையால் அமுக்கியும், தாக்கியும் காதில் அணிந்திருந்த நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.