ஜோலார்பேட்டை அருகே ராணுவ வீரர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
ஜோலார்பேட்டை அருகே புதைக்கப்பட்ட ராணுவ வீரரின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே புதைக்கப்பட்ட ராணுவ வீரரின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
ராணுவ வீரர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 55). பெங்களூருவில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். கடந்த 8-ந் தேதி 6 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். 11-ந் தேதி அவர் திடீரென உடல்நிலை பாதிகப்பட்டு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பார்த்திபன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பார்த்திபனின் உடலை 12-ந் தேதி மாலை ஏலகிரி கிராமம் சுடுகாட்டில் புதைத்துள்ளனர். பின்னர் பார்த்திபன் இறந்தது குறித்து அவர் பணிபுரிந்து வந்த அலுவலகத்திற்கு மனைவி சாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.
உடல் தோண்டி எடுப்பு
இதனால் பார்த்திபனுக்கு பென்ஷன் மற்றும் இதர உதவிகள் கிடைப்பதற்கு பார்த்தீபன் இறந்ததற்கான போலீசாரின் முதல் தகவல் அறிக்கை காப்பி, இறப்பு சான்றிதழ் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால் சாந்தி கடந்த 16-ந் தேதி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து தரவேண்டும் எனக் கூறி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, திருப்பத்தூர் வருவாய் துறை அலுவலர்கள் முன்னிலையில் வேலூர் மருத்துவ குழுவினர் மகேந்திரன் தலைமையில், புதைக்கப்பட்ட பார்த்திபனின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரோத பரிசோதனை செய்தனர்.