ஆசனூர் அருகே வாகனம் மோதி சிறுத்தை பலி

ஆசனூர் அருகே வாகனம் மோதி சிறுத்தை பலியானது.

Update: 2021-11-21 21:22 GMT
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஆசனூர் - திம்பம் செல்லும்  சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று சிறுத்தை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த அடிபட்ட சிறுத்தை அந்த இடத்திலேயே இறந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்த சிறுத்தைக்கு 2 வயது இருக்கும் எனவும், இது பெண் சிறுத்தை என்றும் கூறினர். மேலும் சிறுத்தை மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்க கண்காணிப்பு காட்சிகளை வைத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்