பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கீழ பஞ்சப்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது 22). கூலி தொழிலாளி. இவருக்கும், 14 வயதுடைய பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த சிறுமிக்கு நேற்று உடல் நலம் சரியில்லாததால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்தபோது, அவர் 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது பற்றி அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் சமூக ஊர் நல அலுவலர் கவுரிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவள்ளி விசாரணை நடத்தி, சிறுமியை கர்ப்பமாக்கியதாக அருண்பாண்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து திருச்சி மகிளா கோட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.