ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மோசடி

புதுச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ. 6 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

Update: 2021-11-21 21:04 GMT
புதுச்சேரி, நவ.22-
புதுச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ. 6 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
ஜவுளிக்கடை உரிமையாளர்
புதுவை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). இவர் சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். தனது கடைக்கு தேவையான துணிகளை சென்னை ராயபுரத்தில் உள்ள பிரகாஷ் என்பவரிடம் ரூ.16 லட்சத்திற்கு வாங்க முடிவு செய்தார். 
இதற்காக சரவணன், கடை மேலாளர் ஜோஸ்வாவுடன் கடந்த மாதம் (அக்டோபர்) 16-ந் தேதி சென்னைக்கு சென்று      துணிகளை           தேர்வுசெய்து    ஆர்டர்    கொடுத்தார். மேலும் முதல் தவணையாக ரூ.5 லட்சமும், 2-வது தவணையாக ரூ.ஒரு லட்சமும் வழங்கினார்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் ஆர்டர் கூறியபடி பிரகாஷ் துணிகளை அனுப்பி வைக்கவில்லை. இதுபற்றி கேட்டபோது சரியாக பதில் கூறவில்லையாம். இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டபோது, அதனை கொடுக்காமல் அவர் காலம் கடத்தி வந்தார். 
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரவணன் பெரியகடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பிரகாஷ் மீது மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்