பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் நலத்திட்ட உதவி- கலெக்டர் வழங்கினார்

பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் வழங்கினார்.

Update: 2021-11-21 19:46 GMT
சிவகிரி:
சிவகிரியில் உள்ள திருமண மண்டபத்தில், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார், வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் ஹஸ்ரத்பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், வேளாண்மை துறை, பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 86 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்து 73ஆயிரத்து 269 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கோபால சுந்தரராஜ் வழங்கினார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுதா, சிவகிரி தாசில்தார் ஆனந்த், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தெய்வசுந்தரி, சங்கரன்கோவில் ஆதி திராவிட நலத்துறை தாசில்தார் சுப்பையன், வாசுதேவநல்லூர் யூனியன் ஆணையாளர் வேலம்மாள், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் கனகவல்லி, மணிகண்டன், வீரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்