சோளிங்கர் அருகே சாலையில் விழுந்த மரக்கிளையை அகற்றிய கலெக்டர்
சாலையில் விழுந்த மரக்கிளையை அகற்றிய கலெக்டர்
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்ட முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைப்பெற்றது. அரக்கோணம் நடந்த முகாமினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்துவிட்டு அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சோளிங்கர் அடுத்த கரிக்கல் பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலையில் ஓரமாக இருந்த புளியமரத்தின் பெரிய கிளை ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்துகிடந்தது.
இதை பார்த்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தனது உதவியாளர், ஓட்டுனர் மற்றும் பாதுகாவலர் ஆகியோருடன் மரக்கிளையை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தார்.