ரேஷன் கடை ஊழியர் நீரில் மூழ்கி பலி
சங்கராபுரம் அருகே ரேஷன் கடை ஊழியர் நீரில் மூழ்கி பலியானார்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே கிடங்குடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன் (வயது 56) இவர் மூரார்பாளையம் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஓடையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.