பொள்ளாச்சி நகராட்சியில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு
பொள்ளாச்சி நகராட்சியில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் சுகாதாரத்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கொரானா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் உள்ளது.
இந்த நிலையில், நகர பகுதியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கும் வகையில், குதிரையுடன் தெரு, தெருவாக சென்று கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள், தடுப்பூசி போடப்படும் மையங்கள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தொடங்கிறது.
இதனை நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில், நகர்நல அலுவலர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.