அரசு கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்
அரசு கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்
கோவை
கோவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
கோவை அரசு கலைக்கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவி கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பேராசிரியரான ரகுநாதன் (வயது 42) பி.பி.ஏ. துறை தலைவராக பணியாற்றி வந்தார்.
இவர் மாணவிகளுக்கு தனது செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் மூலம் ஆபாச தகவல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த தாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் அமைப்பு சார்பில் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.
விசாரணைக்குழு
அத்துடன் பேராசிரியர் ரகுநாதன் மீது கலெக்டர் அலுவலகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பேராசிரி யர் ரகுநாதன் மீது கடத்தல், கொலைமிரட்டல், பெண் களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வழிகாட்டுதல்படி பேராசிரியர் ரகுநாதன் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க கல்லூரி முதல்வர் கலைசெல்வி, விசாரணை குழு அமைத்தார். இந்த குழுவினர் கல்லூரி மாணவிகள், சக பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
பணியிடை நீக்கம்
இந்த விசாரணையில் பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இது குறித்த அறிக்கை மாநில கல்லூரி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
இதைத்தொடர்ந்து கல்லூரி இயக்குனர் பூர்ண சந்திரன், மாணவி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ரகுநாதனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பேராசிரியர் ரகு நாதன் தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிளை சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.