தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மானாவாரி பயற வகை விதைப்பண்ணை அமைத்து பயன்பெறலாம் என்று தூத்துக்குடி விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அசோகன் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மானாவாரி பயற வகை விதைப்பண்ணை அமைத்து பயன்பெறலாம் என்று தூத்துக்குடி விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அசோகன் தெரிவித்துள்ளார்

Update: 2021-11-21 12:32 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மானாவாரி பயற வகை விதைப்பண்ணை அமைத்து பயன்பெறலாம் என்று தூத்துக்குடி விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அசோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயறு வகை
மானாவாரி பருவத்தில் அதிக மகசூல் பெற குறைந்த வயது உடைய உளுந்து மற்றும் பாசிப்பயிறு ரகங்கள் விதை உற்பத்தி செய்து அதிக வருவாய் ஈட்டலாம். பயறு வகை விதைகளில் புரதச்சத்து அதிகம் உள்ளதால,் உளுந்து பயறில் வம்பன்- 8, வம்பன்-6, எம்.டி.யு- 1, கோ- 6, ரகங்களும், அதுபோல் பாசிப்பயறு வகையில் கோ- 7, கோ- 8, வம்பன்- 4 ரகங்களும் விதை உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.
இவை பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு தன்மை உடையவை. ஒரே நேரத்தில் பூக்கும் தன்மை உடையதால் அறுவடை நேரத்தில் விதைகள் உதிருவது தடுக்கப்படுகிறது. விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் விதைப்பண்னை பதிவு கட்டணமாக ஒரு அறிக்கைக்கு ரூ.25-ம், ஒரு ஏக்கர் விதைப்பண்ணை ஆய்வு கட்டணம் ரூ.50 மற்றும் பரிசோதனை கட்டணம் ரூ.30 செலுத்த வேண்டும்.
விதைப்பண்ணை
விதைப்பு அறிக்கை 3 நகல்களில் மேற்கண்ட கட்டணத்துடன் நேரில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் விதைப்பண்ணை பதிவு செய்திட வேண்டும். விதைப்பண்ணைகள் விதைச்சான்று அலுவலரால் பூக்கும் பருவம் மற்றும் காய் முதிர்ச்சி பருவத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
தானிய பயிறு வகை விலையை விட சான்று பெற்ற விதைக்கு அதிக விலை கிடைக்கின்றது. எனவே விவசாயிகள் நடப்பு மானாவாரி பருவத்தில் பயறு வகை விதைப்பண்ணைகள் அமைத்து பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்