கயத்தாறு பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

கயத்தாறு பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-11-21 12:16 GMT
தூத்துக்குடி:
கயத்தாறில் மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் கைதான வாலிபர் மற்றும் வழிப்பறி வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மனைவியை கொல்ல முயற்சி
கயத்தாறு வடக்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் சங்கிலிபாண்டி (வயது 33). இவர் கடந்த மாதம் மது குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு அவரது மனைவி பத்திரகாளியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் தர மறுத்த மனைவியை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பலத்த காயமடைந்த அவரது மனைவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து பத்திரகாளி அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலிபாண்டியை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
மூதாட்டியிடம் வழப்பறி
மேலும், கடந்த மாதம் கயத்தாறு சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சண்முகையா மனைவி காளியம்மாள் (வயது 60) என்பவரிடம் தங்க சங்கிலியை வாலிபர் ஒருவர் வழிப்பறி செய்து தப்பி சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கயத்தாறு போலீசார் முத்தையாபுரம் குமாரசாமி நகரைச் சேர்ந்த சுடலைமணி மகன் நயினாரை (22) கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயலில் அடைக்கப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்த 2 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையின் பேரில் சங்கிலிபாண்டி மற்றும் நயினார் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்களை பாளையங்கோட்டை ஜெயலில் ஒப்படைத்தார்..

----

மேலும் செய்திகள்