போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

புளியரை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-20 21:46 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டம் புளியரை அருகே உள்ள தெற்குமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஏசு ராஜன் மகன் பேச்சிராஜன் (வயது 45). இவர் 14 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பேச்சிராஜனை கைது செய்தனர். 


மேலும் செய்திகள்