கார் மோதி தூய்மை பணியாளர் பலி

பாளையங்கோட்டை அருகே கார் மோதி தூய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-20 20:46 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் வடக்கூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47). இவர் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மொபட்டில் நான்கு வழிச்சாலையில் இருந்து கீழநத்தம் விலக்கு சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்