ஜலகண்டாபுரத்தில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது வழக்கு
ஜலகண்டாபுரத்தில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஓமலூர்:
ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது அக்காள் மகளான அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார். பின்னர் அவரை கட்டாயப்படுத்தி கற்பழித்ததாக தெரிகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.