பாளையங்கோட்டையில் சாலையில் சாய்ந்த மரம்

பாளையங்கோட்டையில் மரம் ஒன்று சாலையில் சாய்ந்து விழுந்தது.;

Update: 2021-11-20 20:32 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து உள்ளன. இந்த நிலையில் பாளையங்கோட்டை நூலகம் அருகே உள்ள மேல்நிலைப்பள்ளி அருகில் நின்றிருந்த மரம் நேற்று மாலை திடீரென்று சாய்ந்து சாலையில் விழுந்தது. மேலும் அங்கிருந்த மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் மரக்கிளைகளை வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் மின்கம்பிகளை மீண்டும் இணைத்து மின் வினியோகத்தை சீரமைத்தனர்.

மேலும் செய்திகள்