மண் சாலை வெள்ளத்தில் மூழ்கியது

ஜோலார்பேட்டை அருகே மண் சாலை வெள்ளத்தில் மூழ்கியது.

Update: 2021-11-20 18:51 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி ஊராட்சி ஜண்டாகாரன் வட்டம் அருகில் உள்ள பூசாரி வட்டம் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். 

அந்தக் கிராமத்துக்குச் செல்ல மண் சாலை உள்ளது. கடந்த சில நாட்களாக ெபய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மண் சாலை மூழ்கியது.

வாகனங்களில் வருவோர் மண் சாலையில் செல்ல முடியாமல் அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளில் நிறுத்திவிட்டு முழங்கால் அளவு மழைநீரில் இறங்கி நடந்து சென்று வருகின்றனர். 

எனவே மண் சாலையில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றக் கோரி ஒன்றிய கவுன்சிலர் ஆ.கலாஆஞ்சியிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

நேற்று சம்பவ இடத்துக்கு வந்த ஒன்றிய கவுன்சிலர் அங்கு தேங்கியிருந்த மழைவெள்ளத்தை அகற்ற தற்காலிக நடவடிக்கையை  மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்