மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலி

Update: 2021-11-20 17:03 GMT
அனுப்பர்பாளையம், 
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 60). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தை பிரிந்து திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். கடந்த 14-ம் தேதி மதியம் ரவி குடிபோதையில் அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரி அனுமதிக்கப்பட்ட ரவி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்