கூடலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

கூடலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.;

Update: 2021-11-20 16:36 GMT
கூடலூர்:
கம்பம் அப்பாவு பிள்ளை தெருவை சேர்ந்தவர் அப்பாஸ் மந்திரி (வயது 55). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அந்த ஆட்டோவில் பயணிகள் யாரும் இல்லை. கூடலூர் அருகே துர்க்கையம்மன் கோவில் பகுதியில் அவர் வந்தபோது, திடீரென்று ஆட்டோ நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. 
இதில் படுகாயம் அடைந்த அப்பாஸ் மந்திரி உயிருக்கு போராடினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு  சிகிச்சை பலனின்றி அப்பாஸ் மந்திரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்