கஞ்சா விற்ற பனியன் தொழிலாளி கைது

கஞ்சா விற்ற பனியன் தொழிலாளி கைது;

Update: 2021-11-20 16:29 GMT
வீரபாண்டி, 
திருப்பூர் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட பல்லடம் சாலை டி.கே.டி.பஸ் நிறுத்தம் அருகே சிலர் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வீரபாண்டிய இன்ஸ்பெக்டர் ஆனந்த் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தார். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர் பையில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பரின் மகன் அருண் (வயது24) என்பதும் இவர் திருப்பூர் காலேஜ் ரோட்டில் மரக்கடை பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு கஞ்சா வாங்கி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்