கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது

கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-20 15:33 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் கிராமம் கிழக்குத் தெருவில் குடியிருப்பவர் ராஜ் வையாபுரி மகன் அஜித் குமார் (வயது 23). ஆட்டோ டிரைவர்.
இவர் கோவில்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த 17 வயது கல்லூரி மாணவியிடம் கையை பிடித்து இழுத்து, பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டாராம். இதில் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும் அஜித் குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவி, கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் நாககுமாரி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அஜித் குமாரை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்