வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

ஊட்டியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது. இதனை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-11-20 14:12 GMT
ஊட்டி

ஊட்டியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது. இதனை கலெக்டர் ஆய்வு செய்தார்.

சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைப்படி 1.1.2022-ந் தேதியை தகுதி நாளாகக்கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-வது வாரமாக நேற்று சிறப்பு முகாம் கூடுதலாக நடைபெற்றது. 

ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்குதல் போன்றவற்றுக்கு விண்ணப்பங்கள் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு இருந்ததை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களது பெயர் உள்ளதா என்று உறுதி செய்து கொண்டனர். 

கலெக்டர் ஆய்வு

ஊட்டியில் அரசு உதவிபெறும் பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இருப்பினும் ஊட்டியில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் நடந்த முகாம்களில் பொதுமக்கள் பெரும்பாலும் வரவில்லை. 

இதனால் முகாம்கள் மக்கள் இன்றி வெறிச்சோடி இருந்தது. ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொண்டு வருவதால் முகாம்களில் கூட்டம் குறைவாக இருந்ததாக தெரிகிறது.

மேலும் செய்திகள்