மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்
மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்;
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஊட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் சாலையோர மண் ஈரப்பதமாக உள்ளதோடு, குடியிருப்புகளை ஒட்டி உள்ள தடுப்புச்சுவர், மண் தண்ணீரால் ஊறிப்போயிருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி லவ்டேல் அருகே அன்பு அண்ணா காலனியில் வீடுகளை ஒட்டி இருந்த தடுப்புச்சுவர் இடிந்து அருகே இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதனால் மண் சரிவு ஏற்பட்டது.
அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அங்கு 3 வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- அவலாஞ்சி-8, அப்பர்பவானி-4, தேவாலா-18, பந்தலூர்-57 உள்பட மொத்தம் 99.3 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 3.42 ஆகும்.