நாமக்கல் மாவட்டத்தில் 1,000 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 1,000 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Update: 2021-11-20 04:39 GMT
நாமக்கல்:
சேலம் குடும்பநல நீதிமன்ற நீதிபதியை மாற்ற வேண்டும், கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கீழமை நீதிமன்றத்தில் பணி புரியும் வக்கீல்களுக்கு, நீதிபதிகள் உரிய மரியாதையை தர ஐகோர்ட்டு தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என கூட்டமைப்பின் தலைவர் எஸ்.கே.வேலு அறிவித்திருந்தார். 
அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பரமத்திவேலூரில் சுமார் 1,000 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் வழக்கமான கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டதாக வக்கீல்கள் தெரிவித்தனர். ‌

மேலும் செய்திகள்