கடையம் அருகே விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி

கடையம் அருகே நடந்த விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பரிதாபமாக பலியானார்.

Update: 2021-11-19 22:02 GMT
பாவூர்சத்திரம்:
கடையம் அருகே உள்ள புலவனூரை சேர்ந்தவர் அய்யங்கண்ணு. இவருடைய மகன் கதிர்வேல் (வயது 23). இவர் தென்காசியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் தென்காசியில் இருந்து அம்பை - தென்காசி சாலையில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியும், கதிர்வேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் பலத்த காயம் அடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மினி லாரியை ஓட்டி வந்த தென்காசி பாறையடி தெருவைச் சேர்ந்த டிரைவர் ஜமால்மைதீன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்