கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் சுப்பிரமணியனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்ற அவருக்கு காலில் தீராத வலி இருந்தது. இதனால் மனமுடைந்த சுப்பிரமணியன் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.